மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூளாவடி பகுதியில் இன்று (20) பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூளாவடி பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயான வி. விஜயராணி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு நீண்ட காலமாக சக்கரை நோயால் மன உளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக, சம்பவத்தினன்று வீட்டின் முற்றத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து, நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.