எதிர்வரும் மாதம் அமைச்சரவையில் மாற்றம்!
எதிர்வரும் ஓகஸ்ட் மாததின் நடுப்பகுதியில் அமைச்சரவையில் மாற்றம் ஒன்று நிகழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைய உறுப்பினர்கள் சிலருக்கு பிரபல அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, இப்போதைய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சு பதவியை வகித்துவரும் அமைச்சர் ஒருவரை, அமைச்சு பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.