ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய சீனா ஆர்வம் – விவசாய அமைச்சர்

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை பெற்றுக்கொள்ள சீன நிறுவனம் விடுத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கண்காட்சி நோக்கங்களுக்காக சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு ஒரு இலட்சம்  குரங்குகளை ஏற்றுமதி செய்யுமாறு சீன நிறுவனம் விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

“இருப்பினும், பல சுற்றுச்சூழல் அமைப்புகள் குரங்குகள் சீனாவிற்கு உணவாக ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி இந்த விடயத்தில் கவலைகளை எழுப்பின. 

இலங்கையில் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் சீன நிறுவனம் தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளதால், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் ஆர்வலர்கள் தற்போது இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

“நாட்டில் எதிர்கொள்ளும் பெரிய அளவிலான பயிர் அழிவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதே சாத்தியமான தீர்வாக அதிகாரிகள் கருதுகின்றனர். இது ஒரு முழுமையான தீர்வு அல்ல, ஆனால் ஒரு விருப்பம், ”என அமைச்சர் மேலும் கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.