சட்ட புத்தகத்தில் மறைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட துப்பாக்கி

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்கு சட்டத்தரணி போல் வேடமணிந்த பெண்ணொருவரும் உடந்தையாக செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சட்டத்தரணிகள் போல் வேடமணிந்து வந்த இருவர் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை புத்தகத்தினுள் கைத்துப்பாக்கியை மறைத்து வைத்தே நீதிமன்றினுள் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட 5 விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரையும் அவருக்கு உதவிய நபரையும் பொலிஸார் அடையாளம் கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் தற்போது பெண்ணொருவர் உள்ளிட்ட இருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டு அவர்கள் தொடர்பிலான தகவல்களை தருமாறு பொது மக்களிடம் கோரியுள்ளனர்.