பொலிஸ் சார்ஜன்டின் ATM அட்டையை திருடிய கான்ஸ்டபிள் கைது!
பொலிஸ் சார்ஜன்டின் வங்கி அட்டையினை திருடி 41 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கதுரேவெல, கல்லலெல்ல, குசும்கம பிரதேசத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் நகரில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பொலிஸ் சார்ஜன்ட் பணம் எடுக்கும்போது, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த வங்கி அட்டையை திருடி சென்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.