சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்!
லாப்ஸ் எரிவாயு நிறுவனமானது தனது விலையினை அதிகரிக்க உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எவ்வளவு தொகையினால் எரிவாயுவின் விலை அதிகரிப்பது தொடர்பான எவ்வித தகவல்களும் தற்போதுவரை வெளியாகவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்திற்கு எரிவாயு விலை அதிகரிக்கும் இயலுமை காணப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 984 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் புதிய விலை 2,840 ரூபாயாக காணப்பட்டது.
அவ்வாறே 5 கிலோ எரிவாயுவின் விலை1,136 ரூபாயாக உயர்வடைந்தது.
அத்தோடு, லிட்ரோ நிறுவனமும் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 1,182 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து அதன் புதிய விலை 2,675 ரூபாயாகக் எகிறியது.
ஐந்து கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 1,071 ரூபாயாக அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது சந்தையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.