Doctor அர்ச்சனாவை CID விசாரணைக்கு உட்படுத்த தீர்மானம்!
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான இராமநாதன் அர்ச்சுனாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி மருத்துவர் அர்ச்சுனாவின் கருத்துக்கள் தொடர்பில் சிஐடி விசாரிக்க வேண்டும் என்று இந்த முறைப்பாடு வலியுறுத்துவதாகவும் ஆனால் விசாரணைகள் தொடங்கப்படவில்லை என்பதை தல்துவ உறுதிபடுத்தியுள்ளதாகவும் குறித்த ஊடகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மருத்துவர் அமர்ந்திருப்பதைக் காட்டும் காணொளி வெளியானதை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
மேலும்இ தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறும் காணொளியொன்றை மருத்துவர் அர்ச்சுனா சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.