மனித புதைகுழியை மூடிமறைக்காதே – முல்லையில் பெரும் போராட்டம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாமெனவும் எமக்கு உண்மையும் நீதி வேண்டுமெனவும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்றலில் இடம்பெற்றது.
காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது மேற்கொள்ளும் அச்சுறுத்தல் செயற்ப்பாடுகளுக்கு இதன்போது கண்டணம் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.