பிரபாகரன் பிள்ளைகளை ஏன் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை? – காரணத்தைச் சொல்கிறார் பிரபாகரனின் அண்ணன் மகன் (வீடியோ)
புலிகள் இயக்கத்திற்குள் தவறு இழைத்ததற்காக அதன் தலைவர் பிரபாகரன், தனக்குத்தானே தண்டனை கொடுத்தவர் என டென்மார்க்கில் இருக்கும் பிரபாகரனின் சொந்த அண்ணனின் மகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த விசேட பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து பிரபாகரனின் அண்ணன் மகன் தெரிவித்த விடயங்கள் ஆவது,
சித்தப்பாவின் (பிரபாகரனின்) பிள்ளைகளை தம்மோடு அனுப்பி வையுங்கள் அவர்கள் இங்கு படிக்க முடியும் தானே என்று கேட்டபோது அதற்கு சித்தப்பா மறுப்பு தெரிவித்து விட்டார்.
நான் நினைத்தால் எனது பிள்ளைகளை அனுப்பலாம், தாய் தகப்பன் இருக்கின்ற பிள்ளைகளும் அனுப்பி வைக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இருக்கின்ற பிள்ளைகளுக்கு இவ்வாறான சந்தர்ப்பம் வருமா, இல்லை. எனவே என்னுடைய பிள்ளைகளுக்கும் அப்படி இருக்கக் கூடாது.
அவர்களும் சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் எனக் கூறி அனுமதிக்கவில்லை என்றார்.
தலைவர் ❤️ pic.twitter.com/4ALLm9Tqg7
— பிரபா (@prabhaarr) December 3, 2023