மாகாண அதிகாரங்கள் வழங்காமல் தேர்தலை நடத்த கூடாது – விக்னேஸ்வரன்
(LBC Tamil) மத்திய அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்த அதிகாரங்களை மீள வழங்காமல் தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரது செயலாளராக இருந்த கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (29.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
13வது திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்துவதும் மற்றும் மாகாணசபைகளிடமிருந்து மத்திய அரசு எடுத்த அதிகாரங்களை மீள வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனும் நானும் கலந்துரையாடினோம்.
சிலர் மாகாணசபை தேர்தலை உடனடியாக வைக்குமாறு கூறும் நிலையில் மாகாணசபையிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்படாமல் தேர்தலை வைத்து பயனில்லை.
தேர்தலை காரணம் காட்டி வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெறுவதற்காகவே அவர்கள் மாகாண சபை தேர்தலை வைக்குமாறு கோட்கின்றனர்.
மாகாண சபையில் இருந்து பறிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மீள மாகாணத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அத்தோடு மாவட்ட செயலகம் ,பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர்கள் மாகாண நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
திருகோணமலை, கன்னியா பிரதேச சபையின் கீழ் இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதனை எடுத்துள்ளது.
இவ்வாறு மாகாண சபையின் பல அதிகாரங்கள் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றை மீள மாகாண சபைகளுக்கு பெற்று கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
LBC Tamil News
எமது நிலமும் பறிபோய், இனப் பரம்பலும் மாற்றப்பட்ட பின் சமஷ்டியை பெற்று என்ன பயன்?