மஹிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் கம்பளையில் நடைபெறுவதற்கு இருந்த வைபவமொன்றில் மகிந்த ராஜபக்சவிற்காக அமைச்சர் சமல் ராஜபக்ச கலந்திருந்தார். இதன்போது சமல் ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்தார்.
சத்திர சிகிச்சை காரணமாக பிரதமரினால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், அவரது வாழ்த்து செய்தியினை தாம் வெளியிடுவதாக அமைச்சர் கூறினார்.