நாமல் வடக்கு கிழக்குக்கு வர ஈபிடிபி கடும் எதிர்ப்பு

வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு இடமில்லை, காணி பொலிஸ் அதிகாரம் வழங்கமாட்டோம் என கூறும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வரவேண்டாமென  ஈபிடிபி தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.

மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.