யாழ் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாய் வழிப்பறி
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், பொலிஸர் என கூறி 50,000 ரூபாயை வழிப்பறி செய்த இரண்டு கொள்ளையர்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகே நேற்றைய தினம் நிகழ்ந்துள்ளது. இருவர் வீதியில் சென்ற நபரை வழிமறித்து, தங்களை பொலிஸர் என அறிமுகப்படுத்தி, அவரது உடமைகளை சோதனை செய்தனர். சோதனையின் போது, அவரது உடமையில் இருந்த 50,000 ரூபாயை கொள்ளையிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள கண்காணிப்பு கமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்தி, பொலிஸார் குறித்த கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.