வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில், மின்சாரம் தாக்கியதில் 45 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (03) மாலை நடைபெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை சுத்தமாக்கும் பணிகளில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில், நீரை உறிஞ்சும் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கார்த்திக் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்தார்.
அவரை உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த பரிதாபகரமான சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.