2 பிள்ளைகளின் தந்தை டெங்கினால் பலி – யாழ்ப்பாணத்தில் துயரம்!
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞன் டெங்கினால் உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த போது இளைஞனை மீட்டு , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்தமை தெரியவந்தது.
இந்நிலையில் பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.