முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (புதன்கிழமை, 23) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட கார் மீட்கப்பட்ட சம்பவத்திற்கான வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்த அதிகாரிகள், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.