நள்ளிரவுடன் எரிபொருள் விலை உயர்வு? உண்மை நிலவரம் என்ன?
எரிபொருட்களுக்களது விலைகள் அதிகரிக்கப்பட்டால் அது தொடர்பில் முன்கூட்டியே அறிவித்தல் விடுப்பேன் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவோடு எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக வெளியாகிய செய்திகள் பிழையானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களது விலைகள் உயர்த்தப்படுவதாக பரவிய வதந்திகளை அடுத்து அதிகளவானோர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்திருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பெற்றோலியக் கூட்டு தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று 92 ஒக்டேன் ரக பெற்றோலிற்கு தட்டுப்பாடு நிலவியது.
இதேவேளை லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த வகை பெற்றோல் விற்பனை செய்யப்பட்டது.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் ஒரு லீற்றர் 92 ஒக்டேய்ன் ரக பெற்றோலின் விலையினை 5 ரூபாவால் உயர்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.