பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிப்பு!

சந்தையில் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் 107 ரூபாவுக்கு அதிகமாக கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாகவும்,இதன் காரணமாக பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே இதன் காரணமாக பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலை மேலும் அதிகரிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.