கூட்டு பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழரசு கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும் – கஜேந்திரகுமார் வலியுறுத்து

கூட்டு பேச்சுவார்த்தை தொடபான தீர்மானத்தை இலங்கை தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.