சற்றுமுன் கஜேந்திரகுமார் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் சற்றுமுன் விடுவிக்கப்பட்டார்.
நெல்லியடி பகுதியில் கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை பருத்தித்துறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபனும் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறுவதற்காக தொடர்ந்தும் தடுப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.