O/L பரீட்சை பெறுபேறு ஜூலையில் வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து தேவையான ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் குறித்து சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் தகவல்கள் தவறானவை எனவும், அவை அதிகாரப்பூர்வமல்லாதவை எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.