1500ரூபாய் வரை விற்கப்பப்படும் பச்சை மிளகாய்!
நாட்டில் பல பகுதிகளிலும் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாக காணப்படுவதாக சந்தை நிலவரங்கள் ஊடக தெரியவருகிறது.
அதன்படி ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,000 ரூபாய் தொடக்கம்1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் தட்டுப்பாடுகளால் விலை அதிகரித்திருக்கின்ற போதிலும், வியாபாரிகள் தமது இஷ்டத்திற்கு விலையை அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்நிலையில் சில பொருட்களை பலசரக்கு கடை உரிமையாளர்கள் பதுக்கி வைத்து விலை ஏற்றம் செய்யப்பட்ட பின் அதிக விலைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ள்னர்.