அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில், ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
மேலும், சம்பள உயர்வை செயல்படுத்துவதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.