இந்தியாவின் எதிரிநாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு!
தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தோடு ரஷ்யாவும் தாலிபான்களோடு இணைந்து செயற்பட விரும்புவதை போல செயற்பட்டு வருகிறது.
துருக்கியும் ஆதரவு அளிக்கும் மனநிலையில் உள்ளது. தாலிபான்களுக்கான இந்த ஆதரவு கரம் நீள்வது இந்தியாவுக்கு கடும் சவாலானதாக உரு எடுத்திருக்கிறது.
இந்தியா ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களிலும் பெரும் முதலீட்டு திட்டங்களை செயற்படுத்தி வந்தது.
ஆப்கானிஸ்தானின் எல்லையிலுள்ள ஈரானின் சப்பார் துறைமுகத்தை சீரமைத்ததோடு ஆப்கானிஸ்தானின் மாகாணங்களை இணைக்கும் ரயில் திட்டங்களை செயற்படுத்தியது. அத்தோடு ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தினையும் இந்தியாவே கட்டி தந்தது என பல திட்டங்கள் இந்த பட்டியலில் நீளும்.