யாழில் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய தூதர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் யாழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார்.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இராப்போசனத்துடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா, உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.