தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் பதவி விலகும் தகவல் பொய்

(LBC Tamil) பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மை தன்மை இல்லை என  இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பரவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காக காலத்தை விரயம் செய்வதில் பலனில்லை எனவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது என  சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறினார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M.சார்ள்ஸ் ஆணைக்குழுவில் இருந்து விலகியதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

எவ்வாறாயினும், ஒரு உறுப்பினர் விலகுவதால் ஆணைக்குழுவின் கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான கோரத்தை பேணுவதற்கு தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.