உள்நாட்டு வருவாய் சட்டம் இன்று முதல் அமுலுக்கு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்ட நிலையில் உள்நாட்டு வருவாய் திருத்த சட்டம் இன்று (19) முதல் அமுலுக்கு வருகிறது.
உள்நாட்டு இறைவரித் திருத்தச்சட்ட மூலம் அண்மையில் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்ட மூலத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன.
இதன்போது எதிர்க்கட்சிகள் 3ம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியது. அதற்கமைய ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் பதிவாகின.
அதன்படி, இந்த சட்டமூலம் 2022ம் ஆண்டின் 45ம் இலக்க உள்நாட்டு வருவாய் திருத்த சட்டமாக இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.