பொருத்தமற்ற தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும் – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், “எமக்குள்ளான அகவயமான முற்போக்கு மாற்றமே உண்மையானது; தென்னிலங்கையிலிருந்து அது வராது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்குப் பொருத்தமற்ற தமிழ் தேசிய அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சிங்கள – பௌத்த பேரினவாதத்தை பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ளதாகவும், சிங்கள மக்கள் மாற்றம் எதிர்பார்த்து வாக்களித்தாலும், தமிழ் மக்களின் பிரச்சனைகள் பொருளாதாரத்தைத் தாண்டி இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றுமை இல்லாமல் இளையோரின் பங்களிப்பை தவிர்த்துப் பார்க்க முடியாத நிலை உருவாகி உள்ளதையும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்குப் பொருத்தமற்ற தமிழ் தேசிய அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், உண்மையான மாற்றத்தை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தனர்.
சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, தமிழ் மக்களின் இறைமைக்கான தீர்வுகளைத் தாமதப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக, புதிய மற்றும் ஆழமான மாற்றம் தேவை என அவர்கள் வலியுறுத்தினர்.