3000 யூரோக்கள் கொடுத்து மக்களை கூப்பிடும் இத்தாலி
இத்தாலியில் உள்ள நகரம் ஒன்றுக்கு மக்கள் செல்ல அங்குள்ள அதிகாரிகள் 3000 யூரோக்கள் கொடுக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இத்தாலியின் புக்லியாவின் சன்னி பகுதியில் உள்ள பிரெசிஸ் என்ற நகரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்களை ஈர்ப்பதற்காக அந்த நாட்டு அதிகாரிகள் சுமார் 3000 யூரோக்கள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இத்தாலியில் உள்ள பல சிறிய நகரங்களுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் இந்த கவர்ச்சியான திட்டங்கள் உருவாக்கி உள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, காலியான தங்குமிடத்தை வாங்குவதற்கும் குடியுரிமை எடுப்பதற்கும் மக்களுக்கு 30,000 யூரோக்கள் (சுமார் ₹ 25.1 லட்சம்) வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பான ஒப்பந்தத்தின் பிரத்தியேகங்கள் இன்னும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், வரும் வாரங்களில் விண்ணப்பங்களை ஏற்க தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களுக்கு குடியமர வரும் மக்களுக்கு 3000 யூரோக்கள் வழங்கும் திட்டம் குறித்து பிரேசிஸ் நகர கவுன்சிலர் Alfredo Palese தெரிவித்துள்ள தகவலில், 1991 க்கு முன் கட்டப்பட்ட வரலாற்று மையத்தில் பல காலி வீடுகள் உள்ளன, அவை புதிய குடியிருப்பாளர்களுடன் மீண்டும் உயிருடன் இருப்பதை காண நாங்கள் விரும்புகிறோம்.”
அத்துடன் வரலாறு, “அற்புதமான கட்டிடக்கலை மற்றும் கலைகள் நிறைந்த பழைய மாவட்டங்கள்” மெதுவாக காலி செய்யப்படுவதை காண்பது வருத்தமளிக்கிறது என்றும் பலீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பண ஊக்கத்தொகை ஆனது, பிறப்பு விகிதத்தில் சரிவைச் சந்தித்து வரும் நகரத்திற்கு செல்வதற்கு சாத்தியமான குடியிருப்பாளர்களை கவர்வதற்கான முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.