யாழில் குப்பை கொழுத்திய இளம் குடும்பப் பெண் பரிதாபகரமாக மரணம்!!
வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (7ம் திகதி) மாலை 5 மணியளவில் வீட்டில் குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது ஆடையில் தீப்பற்றியது.
இதனையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (12) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.