யாழில் கோயிலுக்குள் நடந்த கொலை வெறி சம்பவம்!!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் உள்ள கோயிலுக்குள் நடந்த வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

துன்னாலை கிழக்க, குடவத்தை பகுதியில் இன்று (13) பகல் 2.30 மணியளவில் இந்த வாள்வெட்டு இடம்பெற்றது. அந்த பகுதியிலுள்ள முருகன் கோயில் ஒன்றுக்குள் படுத்திருந்த இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வாள்வெட்டுக்கு இலக்கானவர், சில வாரங்களின் முன் இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞனும், மற்றொருவரும் இன்று கோயிலுக்குள் படுத்திருந்த போது, முன்னர் தாக்கப்பட்டவரும், இன்னும் சிலரும் வந்து, வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

இதனால் முன்னர் வாள்வெட்டில் ஈடுபட்டவர், கைகள், கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாள்வெட்டு காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.