யாழில் காதலியின் மிரட்டலால் காதலன் தற்கொலை
காதலித்த பெண் தன்னைத் திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்ய போவதாக கூறியமையால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
இத்துயர சம்பவம் யாழ் கொழும்புத்துறையில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நெழுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார்.
காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் தந்தையார் மகனை பெண்ணுடன் கதைக்க வேண்டாமென கூறியுள்ளார். வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என பெண் வீட்டாரிடமும் தந்தையார் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் குறித்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை.
இதனால் தன்னை திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்வேன் என காதலன் காதலனுக்குத் தொலைபேசியூடாகத் தகவல் அனுப்பியுள்ளார்.
இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்றுமுந்தினம் (15) மாலை தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.