கணவனால் கொலை செய்யப்பட்ட மனைவியின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
யாழ்ப்பாணம், நாவற்குழியில் கணவனால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற்றது.
இதன்போது, அவரது உடலின் பெரும்பாலான பகுதிகளில் கண்டல் காயங்கள், இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தமை தெரியவந்தது.
3 பச்சைமட்டைகள் தும்புதும்பாக காணப்பட்டுள்ளன. அத்தோடு, மனைவியின் முகம், தலையில் கை முட்டியினால் கொடூரமாக குத்தியுள்ளார். தலை முழுதும் கண்டல் காயங்கள்.
தாக்குதலை தடுக்க வந்த தாயாரையும், அருகிலுள்ள அறைக்குள் வைத்து பூட்டி விட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.
மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதும், யாழ் போதனா வைத்தியசாலையில் மனைவியை அனுமதித்து விட்டு, அஜந்தன் தலைமறைவாகி விட்டார்.
மறுநாள் காலை 6.30 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்ற போது, மனைவி உயிரிழந்த தகவலை அறிந்து மீண்டும் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற போது கைது செய்யப்பட்டு, இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணையின் போது தனது சகோதரனுடன் மனைவிக்கு தொடர்பு இருந்தமையை அறிந்தமையினாலேயே இருவரையும் தாக்கியதாக கணவன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.