மாவீரர் நாள் கொடிகாம சம்பவம், 20 ஆயிரம் வாங்கிய சயந்தன் – இதுவா தமிழ் தேசியம்? (வீடியோ)
தமிழ்த் தேசியம் எனும் போர்வைக்குள் தமது பொக்கேற்றை நிரப்பும் போலி தேசியவாதி ஒருவரின் உண்மை முகம்.
கடந்த 27ஆம் திகதி கொடிகாமம் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வின்போது புலி தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட டீசர்ட் அணிந்து நினைவேந்தல் நிகழ்வில் பங்கு பற்றிய 27 வயது இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழரசு கட்சியின் சாவகச்சேரி முக்கியஸ்தருமான சயந்தன் ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கில் ஆஜராகியதற்காக 20,000 ரூபா பணத்தை பெற்றுள்ளார். இந்த பணத்தினை அந்த இளைஞனின் பெற்றோர் நகைகளை அடகு வைத்தே செலுத்தியுள்ளனர்.
தமது பிள்ளையை விடுவிப்பதற்கு உதவி செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் உதவி கேட்டு அந்த இளைஞனின் பெற்றோர் சென்றுள்ளனர்.
இதன்போதே இளைஞனின் பெற்றோர் இந்த விடையத்தினை டக்ளஸ் தேவானந்தாவிடம் கூறுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது.
ஒரு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனின் விடுதலைக்காக அந்த வழக்கில் ஆஜராவதற்கு கூட பணத்தினை வாங்காமல் முன்னிலையாவதற்கு கூட தமிழ் தேசியம் பேசுகின்ற இவருக்கு மனம் இல்லை என்பது வெட்கக்கேடான விடயம்.