யாழ்.பல்கலை நினைவு தூபி – விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூவி பற்றி இளைஞர் மற்றும் ஊழல் ஆணைக் குழுவில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

பல்கலைக்கழகத்திற்குள் அனுமதி பிறப்பிடாமல் முள்ளிவாய்க்கால் நினைவுத் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தூபி அமைப்பதற்கான நிதி கையாளுகை தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உட்பட மூவரினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் இம் முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

தூபி அமைப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களால் நிதி  சேகரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன், அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளையும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் இன்றைய தினம் நண்பகல் விசாரணைகளுக்குச் சமூகமளிக்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொருளாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர் ஒருவரும், தூபி அமைக்கப்பட்ட வேளையில் இருந்த மாணவர் ஒன்றியத் தலைவரும் இன்று நண்பகல் 1.00 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.