யாழ் நகர வீதிகளில் நாய்களையும் மாடுகளையும் மட்டுமே காணமுடிகிறது! பொலிஸார் பெருமிதம்!
நாட்டில் அதிகரித்துள்ளமையால் நாடு முற்று முழுதாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண நகரத்தின் பிரதான வீதிகளில் நாய்களையும் மாடுகளையும் மாத்திரமே காணமுடிவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மிகவும் சரியான முறையில் பின்பற்றுவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரையில் யாழ் நகரம் வெறிச்சோடி காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்தோடு யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் மாடுகள் மற்றும் நாய்களை மாத்திரமே காண முடிவதாகவும் மக்கள் பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
எது எவ்வாறு இருப்பினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறும் நபர்களை கைது செய்ய மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறிப்பிட்டனர்.
கடந்த 20ம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் எதிர்வரும் 6ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.