உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஆவணங்களை கையளிக்க விஜித ஹேரத்தை சந்திக்க அனுமதி கோரிய கம்மன்பில
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில, தன்னிடம் உள்ள முக்கிய பாதுகாப்பு ஆவணங்களை கையளிக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் சந்திப்பதற்கான அனுமதி கோரியுள்ளார். இதனையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணங்களை மறைத்த விவகாரம் திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது.
உதயகம்மன்பில, மிக முக்கியமான பாதுகாப்பு ஆவணங்களை பொது வெளியில் வெளிப்படுத்த முடியாது என்பதையும், இதனால் அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அமைச்சருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அதற்குப் பதில் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால், அவர் பதிவுத் தபால் மூலம் அமைச்சருக்கு கடிதம் அனுப்பி, தன்னிடம் உள்ள ஆவணங்களை பொறுப்பான முறையில் கையளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.