17 வயது சிறுமிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை, கிளிநொச்சியில் பெரும் பரபரப்பு!! (Photos)
இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிகள் இருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
எங்களுக்கு வாழவே பிடிக்கல. அதான் இப்பிடி ஒரு முடிவு எடுத்தோம் என எழுதி கையொப்பம் இட்ட கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இரு சிறுமிகளும் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.