சட்டத்தரணி றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
(LBC Tamil) யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த ஈபிடிபி முக்கியஸ்தரும் சட்டத்தரணி றெமீடியஸ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, நாய் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதன்போது தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த காலத்தில் ஈபிடிபி கட்சியின் சார்பில் போட்டியிட்ட றெமீடியஸ் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
போர் காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படல், படுகொலை செய்யப்பட்ட போது மனித உரிமைகளுக்காக துணிச்சலுடன் செயற்பட்டிருந்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் சட்டத்தரணியாகவும் குறித்த காலப்பகுதியில் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(LBC Tamil)