6 மாதம் பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல்
உள்ளூராட்சிமன்ற தேர்தல் எல்லை நிர்ணயத்தின் பின் நடத்தப்பட்டால் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படுமென எல்லை நிர்ணய குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி அரசியல் கட்சிகளுடன் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன எல்லை நிர்ணய குழுவை நியமித்தார்.
தற்போதைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரத்து 100 முதல் 5 ஆயிரத்து 200 வரை குறைக்க முடியும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.