சிஐடி என கூறி தங்க நகைகள் கொள்ளை- மட்டக்களப்பில் சம்பவம்!

பொலிஸ் சிஜடி என கூறி மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் பெண்ஒருவரை கட்டிவைத்து விட்டு அவரின் காதில்இருந்த தோடு, தங்க சங்கிலி உட்பட 2 அரைபவுண் தங்க நகைகளை திருடிச்சென்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சந்தேகநபர்களிடமிருந்து கார் ஒன்றும் கொள்ளை அடிக்க பயன்படுத்திய கோடரி , கத்தி, 3 கையடக்க தொலைபேசிகள் ஆகியவையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைபிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 5ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் சிஜடி என தெரிவித்து கொள்ளையர்கள் பெண் ஒருவரை கட்டி வைத்து இரண்டரை பவுண் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பிசென்றனர். இதில் சந்தேகத்தில் இருவரை கைதுசெய்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

விசாணையில் அவர்கள் வழங்கிய தகவலோடு, மாவட்ட குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பகுதியை சேர்ந்த நால்வரை கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.