மஹிந்த வீட்டு மின்சார கம்பிகள் அகற்றம் – அநுர அதிரடி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் இன்றைய தினம் அகற்றப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசின் கொள்கையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை அகற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய இரு மின் கம்பிகள் அகற்றப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் வலஸ்முல்ல பிராந்திய அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

கார்ல்டன் தோட்டத்திற்கு மூன்று முனை மின்கம்பிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகற்றப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.