அரசியலுக்கு வருகிறார் மஹிந்தவின் மற்றைய மகன்!
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலின் ஊடாக பாரளுமன்ற உறுப்பினராக வந்த அஜித் நிவாட் கப்ரால் நிதி இராஜாங்க அமைச்சராகவும் இருக்கின்றார்.
இந்நிலையில் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.
இதனால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பிரதமர் அலுவலக பிரதானியாக இருக்கும் யோஷித ராஜபக்சவை நியமனம் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோத்தபாயவின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, அஜித் நிவாட் கப்ரால் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜினாமா செய்யவுள்ளார்.
மஹிந்தவின்வின் தம்பியான பசிலிற்காக தனது தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த ஜெயந்த கெட்டகொடவுக்கு இதனை வழங்குமாறு ஒரு பகுதியினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.