அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுயிடும் மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக சிறிசேன தெரிவித்தார்.
“எந்தவித சதிகளுக்கும் நான் பயப்படவில்லை. நான் நீதித்துறையையும் சட்டத்தையும் மதிக்கிறேன். எதிர்காலத்தில் எனக்கு எவ்வாறான தொல்லைகள் ஏற்பட்டாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எனது கட்சியின் ஆதரவுடன் போட்டியிடுவேன். தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்,” என்றார்.
இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டு 2015- 2019 வரை இலங்கையின் ஏழாவது அதிபராக சிறிசேனா முன்பு பதவி வகித்தார்.