சம்பந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்றில் பலர் அஞ்சலி

தமிழரசு கட்சியின் பெரும் தலைவரும் திருமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7ம் திகதி) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை இன்று புதன்கிழமை மதியம் 2.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அன்னாரது புகழுடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, சம்பந்தன் படித்த பாடசாலைகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினர் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அன்னாரது பூதவுடல் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை (5) முதல் ஞாயிற்றுக்கிழமை (7) வரை அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.