யாழ் வடமராட்சியில் இரவோடு இரவாக பெருமளவு காடழிப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவு காடழிப்பு நடந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (28) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு நிலப்பகுதியை குத்தகைக்கு பெற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு கடிதம் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதனடிப்படையில், பிரதேச செயலகத்தில் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.

இருப்பினும், காடுகள் நிறைந்த இந்த நிலப்பகுதியில் அனுமதியின்றி இயந்திரம் மூலம் இரவோடு இரவாக காடழிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த பகுதி மக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தடுத்து நிறுத்த முயன்ற போதும், குறித்த நபர் தொடர்ந்து காடழிப்பை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில், “குறித்த நபர் குத்தகைக்கு நிலத்தை பெறுவதற்காக கடிதம் தந்துள்ளார். ஆனால் காடுகளை அழிப்பதற்கு நாங்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை. இந்த பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் உள்ளதால், அனுமதி வழங்க எங்களால் முடியாது. இவர் காடுகளை அழித்திருந்தால், இதற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.