செப் 21 ஜனாதிபதி தேர்தல், ரணிலை முந்திய மு.நா
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21ம் திகதி நடத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் திகதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரச அச்சக திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டுள்ளது
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்படுவதற்கு முன்னர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன கட்டுப்பணத்தை வெள்ளிக்கிழமை (26) காலை செலுத்தினார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பித்த முதலாவது வேட்பாளர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.