யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்குச் சென்று காணாமல்போன மணல்காட்டை சேர்ந்த 38 வயதுடைய மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (28) கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (26) அதிகாலை கட்டுமரத்தில் கடலுக்குள் புறப்பட்டுள்ளார். வழக்கமாக காலை 9 மணிக்குள் கரை திரும்பும் அவர், அன்றைய தினம் திரும்பாததை தொடர்ந்து சக மீனவர்கள் கடலுக்குள் சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, அவருடைய கட்டுமரம் மட்டுமே கடலில் மீட்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற தேடுதலின்போதே, இன்று அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாக கடலட்டை வேட்டையில் ஈடுபடும் படகு, மீனவரின் கட்டுமரத்தில் மோதி விபத்துக்காரணமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.