33 வருடங்கள் கழித்து தாயகம் திரும்பிய முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்!
முன்னாள் இந்தியா பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தனர்.
இவர்கள் மூவரையும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.
குறித்த மூவரும், திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்ட கடவுச்சீட்டானது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாத்திரமே செல்வதற்கு ஒரு வழி கடவுச்சீட்டாக மாத்திரமே இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் வழங்கியதாக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.