மூன்று சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது முஸ்லிம் காங்கிரஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், காத்தான்குடி நகர சபை உட்பட மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னர், அந்த கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை பற்று பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் மரச் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பணம் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் செலுத்தப்பட்டுள்ளது.